TRB தேர்வுக்கான இலவச பயிற்சி - விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

TRB தேர்வுக்கான இலவச பயிற்சி - விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 22.11.2023 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://tinyurl.com/mvrz55zu இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். மேலும் தொலைபேசி எண் 04342–296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். 


தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II-இல் தேர்ச்சிபெற்ற தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad