இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 டிசம்பர், 2023

இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


இந்திய இராணுவத்தின் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ் பல்வேறு நுழைவுகளுக்கான இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. இந்திய இராணுவ படையில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி-2023 மாதம் வெளியிடப்பட்டது. இந்திய இராணுவத்தின் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ் பல்வேறு நுழைவுகளுக்கான இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மூலம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை, கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சில் உடல் தகுதித்தேர்வுடன், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.


கடந்த பிப்ரவரி-2023 மாதம் விளம்பர அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் பேரணி தளத்திற்கு வரும்போது வண்ணநுழைவுச்சீட்டு, அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆட்சேர்ப்பு அறிவிப்பில் உள்ளவாறு உறுதிச்சான்றிதழ், காவல்துறையிலிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உட்பட உரிய விளம்பர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட நகல்சான்றிதழ்கள், 20 வண்ண புகைப்படங்கள் போன்றவற்றுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad