அரூரில் தீரன் சின்னமலை முழு வெண்கல சிலை திறப்பு விழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலத்தை முன்னாள் எம்எல்ஏ தனியரசு, கொடி அசைத்து துவக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

அரூரில் தீரன் சின்னமலை முழு வெண்கல சிலை திறப்பு விழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலத்தை முன்னாள் எம்எல்ஏ தனியரசு, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம் அரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கல சிலை திறப்பதற்க்கு வருகை தரும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசரும்  முன்னாள்  கேரளா ஆளுநருமான சதாசிவம், மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E. R ஈஸ்வரன், வருகை தர உள்ளனர்.

இந்த நிகழ்விற்கு  முன்பாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவரும்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  உ.தனியரசு,   கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் சுமார் 1000 - க்கும்  மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாறியை தலையில் சுமந்து கொண்டு அரூர் ரவுண்டானாவில் இருந்து  முக்கிய வீதிகளான பேருந்து நிலையம், மஜ்த்தெரு, நான்கு ரோடு, தி.ரு.வி. நகர், உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.


இந்த ஊர்வலத்தின் போது கேரளா மேளம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியோடு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் அரூர் காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100-ம் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad