தருமபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 டிசம்பர், 2023

தருமபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற உள்ளது.


தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வான கணினி தமிழ் விழிப்புணர் கருத்தரங்கம், ஆட்சி மொழி மின்காட்சி உரை, ஆட்சி மொழி வரலாறு சட்டம், தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைய வலியுறுத்தி வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடக்க உள்ளன.


தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாவணர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர் சங்கங்கள், பொது மக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad