நிகழ்ச்சிக்கு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் யோகவிஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரவையை தொடங்கி வைத்து பேசியதாவது. கடந்த 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 507 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 9.92 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1 இலசட்சத்து 52 ஆயிரத்து 675 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.
நடப்பு 2023-24ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 1 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி,மாவட்ட கவுன்சிலர் சரவணன், நிர்வாககுழு உறுப்பினர்கள், ஆலையின் அலுவலர்கள், கரும்பு விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், கரும்பு விவசாய அங்கத்தினர்கள், ஆலையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக