இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணிகளானது கடந்த 27.10.2023-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மேலும் 27.10.2023 முதல் 09.12.2023 வரை வரப்பெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தப் பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலினை செய்வதற்கான கடைசி நாள் 26.12.2023- ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணியானது 12.01.2024-ம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் எனவும், அதனடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 அன்று வெளியிடப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக