பெரியாம்பட்டி ஆற்று பாலம் அருகே நகைக்கடை அதிபரிடம்6 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 டிசம்பர், 2023

பெரியாம்பட்டி ஆற்று பாலம் அருகே நகைக்கடை அதிபரிடம்6 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம்  அடுத்த பெரியாம்பட்டி ஆற்றுபாலம் அருகே நகைக் கடை அதிபரிடம் 6 கிலோ  தங்க நகை மற்றும் 60 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளயைடித்த வழக்கில் கைதாகிய 5 பேர் மீது குண்டர்  தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவையை சேர்ந்தவர்  பிரசன்னா (40). ராஜவீதியில் நகைகடை வைத்துள்ளார்.


இந்நிலையில் பெங்களூருக்கு புதிய நகைகளை வாங்க பிரசன்னா கடந்த செப்டம்பர் 28ம் தேதி கடையில் பணியாற்றும் ஊழியர்களுடன் சென்றார். பின்னர் பெங்களூரில் 6 கிலோ எடையுள்ள புதிய நகைகளை வாங்கி கொண்டு காரில் காரிமங்கலம் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தார்,


காரிமங்கலம் பெரியாம்பட்டி ஆற்று பாலத்தில் கார் வந்தபோது பின்னால் 2 காரில் வந்த கும்பல் இவர்களை வழிமறித்தது. காரில் இருந்த பிரசன்னா மற்றும் ஊழியர்களை மிரட்டி கீழே இறக்கி விட்ட அந்த கும்பல் காருடன் 6கிலோ தங்க நகை மற்றும் 60 இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கடத்தி சென்றது.


இதுபற்றி காரிமங்கலம் போலீசில் அளித்த புகாரின்  பேரில் சேலம் சரக டிஐஜி. ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், மற்றும் போலீசார் சம்பவ இடத் தில் விசாரணை நடத்தினர். மேலும் பிரசன்னா வந்த காரை, தருமபுரி அடுத்த திப்பம்பட்டி சாலை கொல்லாபுரி அம்மன் கோயில் அருகே போலீசார் மீட்டனர். 


கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் டவர் மற்றும் சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து கேரளாவை சேர்ந்த 15 பேர் இந்த கொள் ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 15 பேரையும் போலீசார் கைது  செய்து சிறையில்  அடைத்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் ரொக்க பணம்  மீட்கப்பட்டது. 


இதனிடையே  அவர்களில் 5  பேர் பல்வேறு திருட்டு  மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள்  நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்ததன்  பேரில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி 5 பேரையும் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். 


அதனை தொடர்ந்து, கேரளா மாநிலம்  இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சிரில்மாதேவ் (34), அப்பு என்ற அந்தோணி (24), பிரவீன்தாஸ் (33), அகில் (30). சீனு (36) ஆகிய 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad