தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தருமபுரி மாவட்டத்தின் 9 வது மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தருமபுரி மாவட்டத்தின் 9 வது மாநாடு தருமபுரியில் நடைபெற்றது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தருமபுரி மாவட்டத்தின் 9 வது மாநாடு தருமபுரி முத்து நினைவு இல்ல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் கூத்தப்பாடி மா.பழனி தலைமை வகித்தார்.


மாவட்ட துணைத்தலைவர் எ.கொ.ஆதிமுதல்வன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் பெ.துரைராஜ் செயலாளர் அறிக்கை வாசித்தார்.  தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன், மருத்துவர் க.பகத்சிங், பேராசிரியர் கு.சிவப்பிரகாசம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மனோ.சிங்காரவேல்  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக கூத்தப்பாடி மா.பழனி, மாவட்ட செயலாளராக பெ.துரைராஜ், மாவட்ட பொருளாளராக செ.கார்த்திக், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக ஆதிமுதல்வன், அருள்குமார், நாகராஜன் ஆகியோரும் இணைச்செயலாளர்களாக  மீரா அரூர் பிரேம்குமார், சுமதி, சக்தி, பென்னாகரம் பிரேம்குமார், ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், தமிழகத்தில் நரபலி உள்ளிட்ட மூடநம்பிக்கை எதிரான சட்டத்தை இயற்றவேண்டும்.


புதிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநிலத்திற்கு தகுந்தார் போன்று கல்வி கொள்கை மாற்றியமைக்கவேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவில் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும், புத்தகம் திருவிழா நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad