பாலக்கோடு பாஜக கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 டிசம்பர், 2023

பாலக்கோடு பாஜக கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா இன்று நகர பாஜக அலுவலகத்தில் நகர தலைவர் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு  மத்திய மாவட்ட நலத்திட்ட பிரிவு துனை தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தார். இதில் கட்சி அலுவலகத்தில் உள்ள வாஜ்பாய் உருவ படத்திற்க்கு கட்சி தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் நகர பொது செயலாளர் முனிராஜ், நகர செயலாளர்கள் நந்தகிரி, சிவா, நகர இளைஞர் அணி தலைவர் அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பிணர்கள் ஸ்ரீதேவி, கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் முருகன், ஒன்றிய இராணுவபிரிவு தலைவர் மாது,  துனைத் தலைவர் கார்த்திக் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad