பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 டிசம்பர், 2023

பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பாப்பாரப்பட்டி பேரூராட்சி வாரச் சந்தை வளாகம் அருகே காய்கறி கடை நடத்தி வந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு கடை நடத்த இடம் ஒதுக்கக்கோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சங்கத்தின் வட்ட துணை தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.  மாவட்ட தலைவர் கரூரான், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். 



நிர்வாகிகள் அண்ணாமலை, மாதம்மாள், சின்னமாதையன், சண்முகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேரூராட்சி மன்றத் தலைவர் பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், திமுக ஒன்றிய செயலாளர் சபரிநாதன், நகர செயலாளர் சண்முகம், வார்டு கவுன்சிலர் விசுவநாதன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 


இதில் மாற்றுத்திறனாளி பெண் கடை நடத்தி வந்த அதே இடத்தில் தொடர்ந்து கடை நடத்த  அனுமதியளிப்பதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad