மக்களுடன் முதல்வர் முகாம் - பொதுமக்களுக்கு சுயதொழில் துவங்க வாய்ப்பு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 டிசம்பர், 2023

மக்களுடன் முதல்வர் முகாம் - பொதுமக்களுக்கு சுயதொழில் துவங்க வாய்ப்பு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


மக்களுடன் முதல்வர்  திட்டம்  தருமபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை அனைத்து பேருராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.  தருமபுரி மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS). வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும்திட்டம் (UYEGP), பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), பிரதமமந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) மற்றும்  அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் (AABCS) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம், மாற்று சான்றிதழ்(TC), சாதிசான்றிதழ், குடும்பஅட்டை, ஆதார்அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் முகாம் நடைபெறும் இடத்திலேயே இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்து கடன் பெற்று தொழில் நிறுவனம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

.எண்

முகாம் நடைபெறும் இடம்

நாள்

நேரம்

1

வர்த்தகர் கால், தருமபுரி

21.12.2023 வியாழக்கிழமை

 

 

காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை

2

துளசி அம்மாள் திருமண மண்டபம், காரிமங்கலம்

3

மல்லிகா பேலஸ்,பாப்பிரெட்டிபட்டி

4

பொன்கற்பகம் திருமண மண்டபம், அருர்

5

செங்குந்தர் மண்டபம், தருமபுரி

22.12.2023 வெள்ளிகிழமை

காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை

6

செங்குந்தர் மண்டபம், பாப்பாரப்பட்டி

7

கம்யுனிட்டி மண்டபம்பி மல்லாபுரம்

8

பிபிசி மண்டபம், தருமபுரி

26.12.2023 செவ்வாய்கிழமை

காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை

9

செங்குந்தர் மண்டபம், அன்னசாகரம், தருமபுரி

27.12.2023 புதன்கிழமை

காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை

10

மீனாட்சி கால், கடத்துர்


மேலும் விவரங்களுக்கு 89255 33941, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad