பாலக்கோடு ஸ்டேட் வங்கி முன்பு கூடைக்கு பதில் கொட்டகை அமைத்து பூக்கள் விற்பனை- வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பறிபோகும் அபாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 டிசம்பர், 2023

பாலக்கோடு ஸ்டேட் வங்கி முன்பு கூடைக்கு பதில் கொட்டகை அமைத்து பூக்கள் விற்பனை- வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பறிபோகும் அபாயம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்டேட் வங்கி முன்பு பூ கடைகள், வளையல் பொட்டு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இயங்கி வருகின்றனர். தினந்தோறும் பாரத ஸ்டேட் வங்கிக்கும், ஏடிஎம் மையத்திற்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். 

வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு பண பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான நிலை உள்ளதாகவும் வங்கி மற்றும் ஏடிஎம் முன்பு நடைபாதை கடைகள் என்ற பெயரில் கூடைகளில் பூக்கள் மற்றும் பழங்களை வைத்து விற்பனை செய்யாமல் கொட்டகை அமைத்து இரவு பகலாக பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad