தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
- 15 வார்டுகளில் பழுதடைந்த சாலை , கழிவு நீர் கால்வாய், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மன்றத்தில் விவாதிக்கப்பட்டு டென்டர் அனுமதி வழங்கப்பட்டது.
- தற்போது பெய்து வரும் மழையால் சாலை மற்றும் தெருக்களின் தேங்கும் நிற்கும் மழை நீரை அகற்றவும்,
- கொரோனா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளுதல்,
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் மருந்து தெளித்தல்.
- 15 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கி குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கீதாவடிவேல், லட்சுமி முனிராஜ், யதிந்தர், கோவிந்தன், கார்த்திகேயன், ரீனா வேலு, புவனேஸ்வரி மணிகண்டன், விஸ்வநாதன், அபிராமி காந்தி, சிவகுமார், வெங்கடேசன், அனிதாரமேஷ், சுகந்தி ரமேஷ், பேரூராட்சி அலுவலர்கள் சம்பத், தங்கராஜ், தூய்மை மேற்பார்வையாளர் தேன்மொழி இறுதியாக துணை தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக