அரூரில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை முழு உருவ சிலையை முன்னாள் கேரள மாநில ஆளுநர் சதாசிவம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 டிசம்பர், 2023

அரூரில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை முழு உருவ சிலையை முன்னாள் கேரள மாநில ஆளுநர் சதாசிவம்.


தருமபுரி மாவட்டம் அரூரில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை முழு உருவ சிலையை முன்னாள் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை ஒரு சிறந்த புரட்சியாளர் மற்றும் போராளியாக விளங்கினார். அவர் புகழை நிலை நாட்டும் வகையில் மத்திய அரசு தபால் தலையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசும் மணிமண்டபம், நினைவு இல்லங்கள் அமைத்து பராமரித்து வருகிறது.


தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் அவ்வப்போது போர் ஏற்படும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் அனைத்தும் அந்த மக்கள் தலையில் விழும். ஆனால் கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் இந்த முறைக்கு மாற்றாக செயல்பட்டனர்.


தாம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி குறித்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது.  விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்ற வேண்டும். என்றார் சதாசிவம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad