தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
15 நிதிக்குழு திட்டத்தில் பொது சுகாதார பயன்பாட்டிற்க்கு 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனம் வாங்கப்பட்டது. 18 வார்டுகளில் பழுதடைந்த சாலை , கழிவு நீர் கால்வாய் சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பவும், தற்போது பெய்து வரும் மழையால் சாலை மற்றும் தெருக்களின் தேங்கும் நிற்கும் மழை நீரை அகற்றவும், கொரோனா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளுதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் மருந்து தெளித்தல்.
பாலக்கோடு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வளைவு பகுதிகளில் 3 இடங்களில் வேகத்தடை அமைத்தல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஸ்தூபி மைதானம் முதல் பஸ் நிலையம் வரை சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுதல், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கி குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், சுகாதாரஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக