அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல்... ஒகேனக்கல்லில் ஆபத்தான பரிசல் சவாரி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 டிசம்பர், 2023

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல்... ஒகேனக்கல்லில் ஆபத்தான பரிசல் சவாரி.


தருமபுரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருவது ஒகேனக்கல் தொடர் விடுமுறையை தொடர்ந்து ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலிற்கு வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

ஆர்வமுடன் பரிசல் சாவாரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை லைப்ஜாக்கெட் அணியாமல் குழந்தகைள் முதல் பெரியவர்கள் வரை  உயிருக்கு ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.


தருமபுரி மாவட்ட நிர்வாகம், பரிசல் சவாரி செய்வது தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது, லைப்ஜாக்கெட் அணிந்து மட்டுமே பரிசல் சவாரி செல்லவேண்டும், அரசு வழிகாட்டியுள்ள எல்லை வரை மட்டுமே செல்ல வேண்டும், நான்கு பெரியவர்கள் ஒரு குழந்தை்என ஐந்து பேருக்கு மட்டுமே ஒரு பரிசலில் அனுமதி, சுழல் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்திருந்தும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பரிசல் ஓட்டிகள் பரிசலை இயக்கி வருகின்றனர். இது தவிர நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான தொகையும் சுற்றுலா பயணிகளிடம், பரிசல் ஓட்டிகள் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


சுற்றுலா பயணிகளி்ன் நலன் கருதி, தருமபுரி மாவட்ட நிர்வாகம் விதிகளை மீறும் பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad