மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திறப்பு விழா நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 டிசம்பர், 2023

மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திறப்பு விழா நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. ஆட்டோ தொழிலாளர்களுக்கென புதிய சங்கம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு,


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரண்டஅள்ளி ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் துவக்க விழா, மாரண்டஅள்ளி  பேருந்து நிலையத்தில்   முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, மாவட்ட பொருளாளர் முருகன், விவசாய அணி மாநில துணைத் தலைவர்  சூடப்பட்டி சுப்ரமணி,ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.செங்குட்டுவன் கலந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பெயர் பலகை திறந்து வைத்து,  ஆட்டோ சங்கத்தை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் எம்.வீ.டி.கோபால், முனியப்பன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், நெசவளார் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜோதிவேல்,  கவுன்சிலர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பஷீர், துணைத் தலைவர் ரவி, துணை செயலாளர் அன்சர் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad