பாலக்கோடு புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பாக பெயரளவில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 டிசம்பர், 2023

பாலக்கோடு புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பாக பெயரளவில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பகுதிகளில் திம்மம்பட்டி பைபாஸ் சாலை முதல் தக்காளி மார்க்கெட் வரையிலும், பட்டாளம்மன்கோயில் முதல் புதூர் மாரியம்மன் கோயில் சாலை வரையிலும் மற்றும் ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஅள்ளி மேம்பாலம் வரையிலும் நகரை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகளால் போக்குவரத்திற்க்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.


மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள், அவசர சிகிச்சைக்காக செல்லும்  108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.


இதனால் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு வாரத்திற்க்குள் ஆக்கிரமிப்புக்களை தாங்களாக அகற்றிகொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறையால் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.


ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றிகொள்ளாததால் நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை பெயரளவில் மட்டுமே செய்துள்ளதாகவும், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad