தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்துள்ள சாமியார் தோட்டம் பகுதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ திரிசக்தி வாராஹீ அம்மன் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைப்பெற்றது. இரண்டறை ஆண்டிற்க்கு ஒரு சனி பெயர்ச்சியானது நடைபெறுவது வழக்கம்.
இன்று மாலை 5. மணி 20 நிமிடத்திற்க்கு சனி பகவான் மகரம் ராசியிலிருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியாகி அங்கிருந்து 9 ராசிகளுக்கு உரிய பலாபலன்களை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நவ ஐஸ்வர்ய சனி பகவானுக்கு மஹா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், ஸ்ரீ வாராஹீ மூல மந்திர யாகம், மற்றும் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமங்கள் நடைப்பெற்றன.
இதில் ஸ்ரீ திரிசக்தி வாராஹீ கோயில் ஸ்தாபகர் சித்தர் பீட குருஜி ஸ்ரீ ஸ்ரீ உத்திரகோசமங்கை கபாலீ வாராஹீசுவாமிகள், அகில இந்திய பாரதிய சந்தியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா மகராஜ் சுவாமிகள், மதுரை ஸ்ரீ ஸ்ரீ, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜி ஆகியோர் சிறப்பு யாகம் செய்து பக்தர்களுக்கு பரிகார நிவர்த்தி ஹோமங்கள் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சனிஸ்வர பகவானை வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக