பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிழாவை முன்னிட்டு தலை முடி சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு பொது ஏலம் விடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 டிசம்பர், 2023

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிழாவை முன்னிட்டு தலை முடி சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு பொது ஏலம் விடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா மாசிமாதம் நடைபெற இருப்பதால், கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள் வைப்போர்களிடம் சுங்க வசூல் செய்யும் உரிமம், தலைமுடி சேகரிக்கும் உரிமம், கோவிலுக்கு சொந்தமான புளியமரங்கள்,  தென்னை மரங்கள், பனைமரங்கள்  மேல் மகசூல் பலன் எடுத்துக் கொள்ளும் உரிமம், காணிக்கையாக வரும் தேங்காய் எடுத்துக் கொள்ளும் உரிமம், போன்றவற்றிற்கு பசலி 1433 ன் படி  29- 12-2023 முதல் 31- 12- 2024 வரை அனுபவித்துக் கொள்ளும் உரிமை குறித்து பொதுஏலம் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் துரை தலைமையில் நடைபெற்றது.


இதில் செயல் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார். இதில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமம் விடப்படுவதால் உரிமம் காலம் முடிந்தவுடன் உரிமம் சொத்து தாமாகவே திருக்கோவில் சுவாதீனத்திற்கு வந்து விடும். தற்காலிக கடைகளுக்கு சுங்க வசூல் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் கடைகளுக்கு  வசூலித்துக் கொள்ளலாம், உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது.


இன்று தலைமுடி சேகரிக்கும் உரிமம், புளியமரம், தென்னை மரங்கள், பனைமரம், பால் குடத்தில் வரும் தேங்காய் உள்ளிட்டவைகள் பொதுஏலம் விடப்பட்டது.


 தற்காலிக கடைகள் வைப்பது சம்மந்தமான ஏலம் மட்டும் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் ஊர்கவுண்டர் முருகேசன், முன்னாள் பேரூரட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad