மாரண்டஅள்ளி , காடுசெட்டிபட்டி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 டிசம்பர், 2023

மாரண்டஅள்ளி , காடுசெட்டிபட்டி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம்.


தர்மபுரி  மாவட்டத்தில்,  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  முற்றிலும் இல்லாத வகையில் செய்ய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மாவட்டம் முழுவதும்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து, பறிமுதல் செய்யப்பட்ட மளிகை கடைகள், பேக்கரிகள், பீடா , பெட்டி கடைகளுக்கு காவல்துறை பரிந்துரையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் அபராதம் மற்றும் கடை இயங்கத் தடை  விதித்தல், மேலும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாதிரி எடுத்து பகுப்பாய்வு அடிப்படையில் சட்ட ரீதியான கோர்ட் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக  பாலக்கோடு தாலுக்கா மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி சாலை செவத்தம்பட்டியில் ஒரு மளிகை கடை மற்றும் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காடுசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ஒரு மளிகை கடையிலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி கடைகாரர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய  உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காவலர்கள் மாதேஸ்வரன், மணிகண்டன் மற்றும் வினு உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து மேற்படி கடைகள் இயங்க தடை விதித்த நோட்டீஸ்  உத்தரவு நகலை கடைக்காரர்களுக்கு வழங்கியும் , கடையை மூடிவிட்டு கதவிலும் ஒட்டப்பட்டது.  


கடை உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிந்த கடைக்காரருக்கும் அபராதம் ரூபாய்.5000 விதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad