காரிமங்கலம்‌ ஏ.சப்பாணிப்பட்டி கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுபடி நிலம் அளக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 டிசம்பர், 2023

காரிமங்கலம்‌ ஏ.சப்பாணிப்பட்டி கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுபடி நிலம் அளக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் பஞ்சாயத்து ஏ.சப்பாணிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர், கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் செட்டியார்  இவர் கடந்த 1957ம் வருடம் வங்கியில் டெபாசிட் செய்த 16 நபர்களுடைய டெபாசிட் பணத்தை கையாடல் செய்த வழக்கில் சிறைக்கு சென்று, சில ஆண்டுகளில் இறந்து விட்டார்.


இதையடுத்து டெபாசிட்தாரர்கள்  கிருஷ்ணகிரி மாவட்ட நொடித்தோர் சொத்தாட்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சமீபத்தில் நீதிமன்றம் வடிவேல் செட்டியாருக்கு சொந்தமான 1 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணம் செட்டில் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டிடிருந்தது, நீதிமன்ற உத்தரவுப்படி  நிலத்தை அளவீடு செய்து சுவாதீனம் எடுக்கும்   பணியில் இன்று காலை வருவாய்த் துறையினர்  ஈடுபட்டனர். 


இதற்க்கு வடிவேல் செட்டியாரின் வாரிசுகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.


அதனை தொடர்ந்து அதிகாரிகள் நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டு நிலத்தை அளந்து சுவாதீனம் எடுத்தனர். நீதிமன்ற உத்தரவுபடி நிலம் அளக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் திடிர் பரபரப்பு

கருத்துகள் இல்லை:

Post Top Ad