பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு அதிவேகத்தில் வரும் பேருந்துகள் வேகத்தடை அமைக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 டிசம்பர், 2023

பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு அதிவேகத்தில் வரும் பேருந்துகள் வேகத்தடை அமைக்க கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் சுமார் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் புரனமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் தினந்தோறும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும்  தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என பேருந்து நிலையத்தில்  எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.


பேருந்து நிலையத்திறக்குள் அதிவேகத்தில் உள்ளே நுழையும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் வேகத்தடை இல்லாததால் தாறுமாறாக வளைவில் முந்தி செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் முன்பு ஜல்லி கற்கள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதால் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி கற்கள் நடந்து செல்பவர்கள் மீதும் வாகனத்திற்கு செல்பவர் மீதும் பட்டு விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. 


எனவே மாவட்ட நிர்வாகம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு  பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் வேகத்தடை மற்றும் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையம் பகுதி என மூன்று இடங்களில் விரிவானவேகத்தடை அமைக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad