தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முக்கிய செய்திக்குறிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 டிசம்பர், 2023

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முக்கிய செய்திக்குறிப்பு.


நடப்பு காலாண்டு 31.12.2023 – க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள், தேசிய அனுமதிச்சீட்டு சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன் வரி செலுத்த வேண்டிய கடைசி  நாள் வருகின்ற 29.12.2023 ஆகும்.

  

எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும்  அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியினை Online மூலம்  50% அபராதத்துடன் 29.12.2023  –க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.   தவறும் பட்சத்தில், 29.12.2023 –க்கு பிறகு சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்படும்.  மேலும், சாலை வரி செலுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இது தவிர, 2023–2024 –ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களான (Non –Transport Vehicles) கார் (Car), ஜே.சி.பி (JCB), கிரேன் (Crane), டிராக்டர் (Tractor), கம்பரசர் (compressor) மற்றும் ரிக் (Rig) ஆகிய வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பசுமை வரியை செலுத்தாமல் பொது சாலையில் இயக்குவது தெரியவருகிறது.  அவ்வாறு, 2023–2024- ஆம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் பொது சாலையில்  இயக்கப்பட்டால் வாகனங்கள் சிறைபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இணையதள முகவரி  (https://parivahan.gov.in) இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad