காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்திகாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மீன்வளத்துறையினர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 டிசம்பர், 2023

காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்திகாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மீன்வளத்துறையினர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டனர்.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளின் உற்பத்திகளை அதிகரிக்க 1.75 லட்சம் பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டினர் மீன் இருப்பு செய்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மீன் வகை குஞ்சுகள் விடும் நிகழ்விற்கு தருமபுரி மீன்வள உதவி இயக்குநர் கோகுல ரமணன் தலைமை வகித்தார். 


இதில் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் தருமபுரி கோட்டாட்சியர் கீதா ராணி ஆகியோர்கள் கலந்து கொண்டு, ஒகேனக்கல் முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின வகை மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு உள்ளிட்ட வகையிலான 1.75 லட்சம் மீன் குஞ்சுகளை காவிரி ஆற்றில் உற்பத்திக்காக விட்டனர். 


இந்த நிகழ்வில் மீன்வள உதவி இயக்குநர்கள் உமா கலைச்செல்வி ( மேட்டூர்) யுவராஜ் (கிருஷ்ணகிரி), தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குநர் சுப்பிரமணி , மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, கவிதா, சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள மேற்பார்வையாளர்கள் குமரவேல் பெருமாள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad