பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழா-ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 டிசம்பர், 2023

பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழா-ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய் கிழமை திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். 


இந்த திருவிழாவிற்கு, பென்னாகரம் மட்டுமில்லாமல், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்த கோவிலுக்கு திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். 


மேலும் முனியப்பன் வேடமிட்டு, குதிரையுடன் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர். பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களது பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad