வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் சின்னாங் குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்த விவசாயிகள் பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் சின்னாங் குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்த விவசாயிகள் பயிற்சி.


அரூர் வட்டாரம் சின்னாங்குப்பம் கிராமத்தில் வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி அரூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த முறையில் கால்நடை வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ஜான் விவிலியன் அவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தீவன மேலாண்மை அடர் தீவனம் உலர் தீவனம் பசுந்தீவனம் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள், மேலும் வெள்ளாடு வளர்ப்பு முறைகள் பற்றியும் கறவை மாடுகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும் மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் தகடூர் நெல் களஞ்சியம் அரூர் இயற்கை விவசாயி  பரணி கலந்து கொண்டு பூச்சி விரட்டி தயாரித்தல் பஞ்சகாவியம் தயாரித்தல் ஐந்து இலை கரைசல் தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் உழவன் செயலியின் பயன்கள் குறித்தும் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நன்றியுரை வழங்கினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad