பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க பாலின வள மையம் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 டிசம்பர், 2023

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க பாலின வள மையம் திறப்பு.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி வட்டார சேவை மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி வட்டார சேவை மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க பாலின வளமையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.12.2023) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைதர உயர்விற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். 


அந்த வகையில் இன்றைய தினம் பருவதனஅள்ளி வட்டார சேவை மையத்தில் பாலின வள மையத்தினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இளம்வயது திருமணத்தை தடுத்தல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை நம் தோழிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முனைப்புடன் ஈடுபடவேண்டும்.


மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஓரிடசேவை மையம் ஆகியவை விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இளம்வயது திருமணங்கள் நடைபெறுவது தற்பொழுது பெருமளவு குறைந்து வருகிறது. பெண்களுக்கான உதவி எண்.1091 மற்றும் 181 குழந்தைகளுக்கான உதவி எண்.1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுத்திடும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாலின வள மையம் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏதிரான பாதிப்புகள் தடுக்கப்படவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


முன்னதாக பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- மதிப்பில் கடன் உதவிகளும், 20 பயனாளிகளுக்கு ரூ.8.50 இலட்சம் மதிப்பிலான தனிநபர் தொழில் முனைவோர் கடன் உதவிகளும், 4 பயனாளிகளுக்கு ரூ.23.25 இலட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவியும் என மொத்தம் 27 பயனாளிக்கு ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள். 


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, பென்னாகரம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சா.பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம், பருவதன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ராணி, மாவட்ட வள பயிற்றுநர் திரு.ஜி.பெருமாள், ஓரிட சேவை மைய முதுநிலை ஆலோசகர் திருமதி.எம்.கலைவாணி, மாவட்ட பெண்கள் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.குணசேகரன், வட்டாட்சியர் திரு.சௌகத்அலி, மாவட்ட வள பயிற்றுநர் திரு.எம்.தென்னரசு, வட்டார இயக்க மேலாளர் திரு.பிரதீப், உதவி திட்ட அலுவலர் திரு.எஸ்.வெற்றி செல்வன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad