தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையத்தில் ஆவின் நவீன பாலகம் அமைக்ப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இப்பாலகத்தை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய விதிகளுக்கு உட்பட்டு ஆவின் முகவர் உரிமம் வழங்கி வாடகை அடிப்படையில் இயங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது விண்ணப்பத்தினை பொது மேலாளர் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, தருமபுரி என்ற முகவரிக்கு 03.01.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
தாமதமாகவோ நாள் கடந்தோ வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மேலும் விபரங்களுக்கு 9894540932 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும், என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக