வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கிட இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 டிசம்பர், 2023

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கிட இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி.


வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கிட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக வாக்கு இயந்திரங்கள் இருப்பறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கிட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி இன்று (13.12.2023) நடைபெற்றது.


எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்- 2024-ன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 18.12.2023 அன்று முதல் துவங்கி பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை வரப்பெறும் நாள் வரை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. 


இந்நேர்வில், தருமபுரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மையங்கள் (EVM Demonstration Centre’s) மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்திலும், 057-பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 058-பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 059- தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்  மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 060-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 061-அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அரூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நேர்வில், மேற்கண்ட ஒவ்வொரு மையத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கிடவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காகவும் இன்று (13.12.2023) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. 


மேலும், மேற்காணும் அனைத்து மையங்களிலும் வருகின்ற 18.12.2023 அன்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மையங்களை (EVM Demonstration Centre’s) பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில்  நடைபெற்றுவரும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக  வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து   பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பருவதனஅள்ளி கிராமத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (13.12.2023) மேலாய்வு (Super Checking of forms) செய்தார்கள்.

 

இந்நிகழ்வுகளின் போது வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு.அசோக்குமார், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.சௌகத்அலி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad