புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 டிசம்பர், 2023

புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்கள்.


தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முடிவுற்ற புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்து புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் வட்டார பொது சுகாதார  கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்து பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தலைமை வகித்தார் உடன் பொது சுகாதார நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் மருத்துவர் தி.சி செல்வவிநாயகம்   மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி இணை இயக்குனர் (மருத்துவம்) மரு.ம.சாந்தி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் ஆர்.கே.ஜெயந்தி அரூர் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர் மாவட்ட   மாற்றுத்திறனாளிகள் அலுவலர் செண்பகவல்லி அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு ஊராட்சி மன்ற தூலவர் அமுதாசங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad