அரூர் பாஜக சட்ட மன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, தருமபுரி மாவட்டம் அரூர் சட்ட மன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பிரவின் தலைமை வகித்தார் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் பட்டியல் அணி மாநில துணை செயலாளர் சாட்சாதிபதி மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் மாவட்ட துணை தலைவர் கிருத்திகா மாவட்ட செயலாளர் சரிதா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகர தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக