மொரப்பூரில் மத்திய கதர் கிராம ஆணையம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 டிசம்பர், 2023

மொரப்பூரில் மத்திய கதர் கிராம ஆணையம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா.


இந்திய கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் மண்பானை, பனைஏரி, தேனி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மொரப்பூரில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மாநில கதர் கிராம வாரிய துணை இயக்குனர் சுரேஷ் வரவேற்றார்.


நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் ஆணைய சேர்மன் மனோஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் கைவினைர்களின் கரத்தை வலுப்படுத்த பிரதமர் மோடி அவர்களின் தூதராக ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வந்துள்ளேன். மின்சாரத்தில் பானை தயாரிக்கும் இயந்திரம், தேனீக்கள் வளர்க்கும் பெட்டி, பனைவெல்லம் இயந்திரம், வேர்ஸ்ட் வுட் கிராப்ட், டர்ன்வுட் உள்ளிட்ட இயந்திரங்கள் இங்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 8000 புதிய குடிசை தொழில்கள் ஏற்படுத்தப்படும், இதன்மூலம் 88000 வேலை வாய்ப்புகள் படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு கிடைக்கும்.இதில் தமிழ்நாட்டில் 8000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.


விழாவில் மண்பானை செய்யும் தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு மின்சார மண்பானை இயந்திரம், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் 60 பேருக்கு பனைமரம் ஏறும் இயந்திரம், தேனீ வளர்ப்பு பெட்டி 200 நபர்களுக்கும், ஊதுபத்தி தயார் செய்யும் இயந்திரம் 100 நபர்களுக்கு என மொத்தம் ரூ 2 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன், விஷ்வபாரதி கல்வி நிறுவனர் சாட்சாதிபதி, அரூர் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர், வட்டாட்சியர் கனிமொழி, மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


இறுதியில் பெண்கள் உரிமை மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad