காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் மாநிலசெயலாளராக அரூரை சேர்ந்த எம்.இம்ரான் என்பவர் நியமனம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 டிசம்பர், 2023

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் மாநிலசெயலாளராக அரூரை சேர்ந்த எம்.இம்ரான் என்பவர் நியமனம்

தர்மபுரி மாவட்டம் அரூர் மஜீத்தெருவை சேர்ந்த எம்.இம்ரான்(30) என்பவரை காங்கிரஸ் பிரிவின்  அமைப்புசாரா தொழிலாளர்கள்  மற்றும் பணியாளர்கள்  அணியின் மாநில செயலாளராக அரூரை சேர்ந்த எம்.இம்ரான் என்பவர்  நியமிக்கப்பட்டிருக்கிறார், இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அரூர் நகர சிறுபான்மை பிரிவு தலைவராகவும் பின்னர் தர்மபுரி மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும்  பணியாளர்கள்  அணியின் தர்மபுரி மாவட்ட தலைவராகவும் பதவி வகித்தார் இந்நிலையில் இவரின் பணியைமேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும்  பணியாளர்கள் அணியின் மாநில தலைவர் வீ.மகேஸ்வரன் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

இதையடுத்து மாநில செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.இம்ரான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜீன கார்கே அவர்குக்கம் திருமதி சோனியாகாந்தி  நாடாளுமன்ற உறுப்பினர்  திரு.ராகுல்காந்தி  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார், மாநில செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.இம்ரானை பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad