மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 டிசம்பர், 2023

மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பில் மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டம் குறித்த பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் தலைமையில் இன்று (28.12.2023) நடைபெற்றது.

மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான தரவு தளத்தை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கான பயன்பாட்டை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம், திறன் உருவாக்கம், மொபைல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 5 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 பிரிவின் கீழ் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான மூத்த குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு துறையில் தனியார் பங்குதாரர்கள் போன்றவர்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பில் பயிற்சி பட்டறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் - 2007 குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் இன்றைய தினம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. மூத்த குடிமக்கள் உதவி எண்:14567 மற்றும் மூத்த குடிமக்களுக்கான செயலி குறித்த விழிப்புணர்வுகளை முறையாக மேற்கொள்ளவும் இப்பயிற்சி பட்டறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.


மேலும், சமூகநலத் துறை சார்ந்த விளக்கங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் - 2007 சட்டம் சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டதோடு, வழக்கறிஞர், முதியோர் இல்ல நிர்வாகி, மருத்துவர் ஆகியோர்கள் மூலம் அலுவலர்களுக்கு மூத்த குடிமக்கள் சட்டம் 2007 தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.ச.பவித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பணிநிறைவு) திரு.ப.தங்கராஜி, சட்டங்கள் சார்ந்த விளக்கங்கள் வழக்கறிஞர் திரு.R.பார்த்திபன், நிர்மலா முதியோர் இல்லம் நிர்வாகி எஸ்.ஆர்.மேரி ரெஜினா, மருத்துவர் மரு.என்.கவிதா மற்றும் தொடர்படைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad