தருமபுரி MPன் வாக்குறுதி காற்றில் கரைந்தது; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராமமக்கள் முடிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 டிசம்பர், 2023

தருமபுரி MPன் வாக்குறுதி காற்றில் கரைந்தது; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராமமக்கள் முடிவு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் சுமார் 1050 குடும்பங்களில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இக்கிராமத்திற்க்கு செல்லும் பிரதான  நுழைவு வாயிலில் உள்ள இரயில்வே  தரைப்பாலம் மிகவும் தாழ்வாகவும், குறுகியதாக உள்ளதால்  கடந்த 60 ஆண்டுகளாக  கனரக வாகனங்கள் ஊருக்குள் வர வேண்டும் என்றால்  8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மேலும் இக்கிராமத்திற்க்குள் சரக்கு வாகனங்கள், டிராக்டர் போன்ற எந்த வாகனங்களாலும் விவசாய பொருட்களை ஏற்றி செல்ல முடிவதில்லை, எனவும் அவசரகாலங்களில் மருத்துவமனைக்கு செல்ல 108-ஆம்புலன்ஸ் தீயனைப்பு வாகனங்கள்  வர வழியில்லாததால் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய நேரத்திதில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவ்வப்போது உயிர் பலி ஏற்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


மேலும் கிராமத்தில் வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர்  சாக்கடை கால்வாய் செல்ல வழியின்றி ஊருக்குள்ளே கழிவு நீர் தேங்கி உள்ளது, இப்பகுதியில் இரயில்வேக்கு சொந்தமான நிலம் உள்ளதால் சாக்கடை கால்வாய் அமைக்க அனுமதி வழங்கப்படாதால் சாக்கடை கால்வாய் ஊருக்குள் தேங்கி நிற்கிறது.


பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் சாக்கடை கழிவு நீரில்  நடந்து செல்வதால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் தொடர்ந்து நோய்கள் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இதே நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது குறித்து அக்கிராம மக்கள் கூறும்போது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தரைப்பாலத்தை உயர்த்தி வாகனங்கள் செல்லவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும் அனுமதி பெற்று தருவதாக வாக்குறுதி கூறி வெற்றி பெற்ற தர்மபுரி திமுக நாடாளுமன்ற எம்.பி.செந்தில்குமார், இதுவரை இக்கிராமம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டு மொத்த கிராமம் புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad