தருமபுரி மாவட்டத்தில் 29 இடங்களில் நேரடி ஒளிபரப்பாகும் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024" நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜனவரி, 2024

தருமபுரி மாவட்டத்தில் 29 இடங்களில் நேரடி ஒளிபரப்பாகும் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024" நிகழ்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான நேரடி ஒளிபரப்பு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கம் மற்றும் கடகத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உட்பட பல்வேறு இடங்களில் காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

நமது தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.  அனைவரையும், உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு அனைத்து தொழில் சார்ந்த பங்குதாரர்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை ஒருங்கிணைத்து பல்வேறு தொழில் பங்குதாரர்களிடையே முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். 


அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளதால். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உள்ளூர் வளத்தைப் பொறுத்து, மாவட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியவும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு எடுத்துச்செல்லவும், வருங்கால தொழில் முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தொழில் வளத்தைப் பெருக்குவதே இந்த உலக தொழில் முதலீடுகள் மாநாட்டின் நோக்காகும்.


மேலும், இம்மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள் முதலிட்டாளர்கள், புத்தாக்க நிறுவனங்கள், குடிமக்கள், தொழில்துறையினர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக அமைப்புகள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், இம்மாநாட்டில் தொழில்கள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதலீட்டாளர்களுக்கு விரைந்து தொழில் துவங்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்க ஆவண செய்யப்படும்.


மாணவர்கள் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படவுள்ள புதிய தொழிற்சாலைகள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள், திறன் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரு சாதாரண பணியாளர்களாக உருவாவதை விட பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதலாளியாக அதாவது ஒரு தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்ற சிந்தனையை ஊக்குவிக்கவும், இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 


எனவே இந்தநிகழ்வில் மாணவர்கள் பங்கேற்று அவர்களின் எதிர்காலத்திற்கான தொழில் முனைவோர் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும்  விதமாகவும் ஜனவரி மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு கீழ்கண்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காலை 9.00 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.

  1. தருமபுரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி
  2. அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி
  3. தொப்பூர் அரசு மேல்நிலைபள்ளி
  4. ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி
  5. பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
  6. பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  7. ஏரியுர் அரசு மேல்நிலைப்பள்ளி
  8. நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி
  9. பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  10. மல்லுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
  11. காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
  12. பொம்மஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி
  13. பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  14. அதிகாரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி
  15. இருமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
  16. கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  17. நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி
  18. ராமியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
  19. அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 
  20. தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளி
  21. தருமபுரி மாவட்ட அரசு கலைக் கல்லூரி
  22. அரசு பொறியியல் கல்லூரி, செட்டிக்கரை
  23. ஜெயலட்சுமி இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி
  24. ஸ்ரீனிவாசா பொறியியல் கல்லூரி
  25. ஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  26. சப்தகிரி பொறியியல் கல்லூரி
  27. வருவான் வடிவேலன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி


மேலும், அனைத்து தொழில் முனைவோரும், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவின் நேரடி ஒளிபரப்பு மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்வுகளையும் www.tngim2024.com என்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இணைய முகவரியில் (portal) நேரலையாக காணலாம்.


ஜனவரி மாதம் 7-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான நேரடி ஒளிபரப்பு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கம் மற்றும் கடகத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திலும் காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.


எனவே தருமபுரி மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள அனைத்து தொழில் முனைவோர்களும், மாணவர்களும், அனைத்து தொழில்முனைவோர்களும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad