பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் க. கங்கா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி முன்னிலை வகித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் வளர்ச்சியில் ஆற்ற வேண்டிய பணி மற்றும் பங்கேற்பு பற்றி விளக்கினார்.
பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல், பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முன்னேற்றம் காண வழிவகை செய்தல், மாணவர்களுக்கு கூடுதலான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தருதல் மாணவர்கள் தன் சுத்தம் சுய ஒழுக்கம் உள்ளிட்டவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரண்டாம் பருவ தேர்வு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெற்றோர் கூட்டம் நடத்தி பெற்றோர்களுடன் கலந்துரையாடுவது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர் முளியப்பன், நரசிம்மன் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சியில் கருத்துக்கள் வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக