தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் உள்ள வெள்ளிச்சந்தையில் 15 நிதிக்குழு மானிய திட்டத்தில் 19 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதீப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல், ஆலமரத்துக்கொட்டாய் கிராமத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, போடரஹள்ளி கிராமத்தில் 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி ஜக்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், ஒன்றிய குழு உறுப்பிணர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்தனர். இதில் முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில்,மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன் அதிமுக நிர்வாகிகள் ரவி, துரைசாமி, சங்கர், பிரபு, ராஜா, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ராஜா, அசோக் பஞ்சாயத்து செயலாளர் முருகன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக