சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜனவரி, 2024

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா.


பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை தாங்கினார்.

பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் இரா.மணிகிருஷ்ணன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் அவசியம், ஒழுக்கம் அறநெறி கல்வி வாழ்க்கை கல்வி உள்ளிட்டவைகளை வாழ்க்கையில் கடைபிடித்து சிறப்பாக வாழ பள்ளி பருவத்தில் ஆசிரியர்களின் அறிவுரைகளையும் பெற்றோர்களின் வழிகாட்டுதலையும் கடைப்பிடித்து வாழ வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


பின்னர் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களும்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கி அரசின் நல திட்டங்களை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, ரேக்கா சத்துணவு அமைப்பாளர் அம்பிகா மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad