தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மறைந்த தேமுதிக நிறுவனரும், திரைப்பட நடிகருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னையில் அணி திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பாமக மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் சிவா, அம முக நகர செயலாளர் ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேமுதிக மாநில கழக அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோ கலந்து கொண்டு விஜய்காந்த் உருவ படத்திற்க்கு முன்பு விளக்கு ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிகவை சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ஞானவேல், நகர செயலாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கணேசன், மகளிர் அணி நிர்வாகிகள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் அதிமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் சங்கர், வணிகர் சங்க தலைவர்கள் முத்து, பொன்னுசாமி மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து விஜயகாந்த் திருஉருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக