ஏரிகளில் இருந்து நெரம்புமண், ஆறுகளில் இருந்து மணல் ஆகியவை கடத்தும் சமூக விரோதிகளுக்கு பாலக்கோடு வருவாய் துறை அதிகாரிகளின் ஆசி வழங்கி உள்ளதால் இரவு நேரங்களில் நொம்பு மண் மற்றும் மணல் தொடர் கொள்ளை நடைப்பெற்று வருகிறது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகிறது, விரைவில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் தனிநபர்களின் வருமானத்திற்காக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகின்றனர்.
பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஏரிகளிலும் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல் அள்ளப்பட்டு வருவது குறித்து விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினால், நாங்கள் வருவாய் துறையினரின் அனுமதி பெற்றுதான் மண் அள்ளுகிறோம் என கூறுகின்றனர்.
வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறி வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகளின் ஆசியுடன் இரவு பகலாக மண் கடத்தப்பட்டு வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி இயற்கை வள கொள்ளையை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக