வத்தல்மலை சுற்றுலா தலத்தினை மேம்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜனவரி, 2024

வத்தல்மலை சுற்றுலா தலத்தினை மேம்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


தருமபுரி மாவட்டம், வத்தல்மலை சுற்றுலா தலத்தினை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை சுற்றுலா தலத்தினை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாமேம்பாட்டு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (03.01.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி வட்டம், வத்தல்மலையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் சுற்றுலா பணிகளை மேம்படுத்துவதற்காக சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான கருத்துரு அரசிற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் சார்பில் முதற்கட்டமாக ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 


இந்நிலையில் தாவரவியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்து, சுற்றுலாத்துறையின் சார்பில் வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.வி.கிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.ஏ.ஜி.பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மா.சத்யா, திரு.அனந்தராம விஜயரங்கன், கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சி.தங்கராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad