மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனிதநேயமிக்க பல சமூக சேவைகளை தருமபுரி மண்ணில் செய்து வருகின்றனர், இந்த அமைப்பு உணவு சேவை, ரத்ததான சேவை, மாற்றுத்திறனாளிக்கு உதவுதல் போன்ற சேவைகளை கடந்த பதினொன்று ஆண்டு காலமாக செய்து வருகிறது, கடந்த ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆதரவற்று உயிரிழக்கும் உடல்களை நல்லடக்கம் செய்யும் அமரர் சேவையை தொடங்கினர்.
இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் இதுவரை 61 ஆண்கள், ஐந்து பெண்கள், ஆறு நபர்கள் ஏழ்மையில் இறந்தோர், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 74 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர், இந்த சேவையை பாராட்டி தருமபுரியில் இயங்கும் உள்ளூர் தொலைக்காட்சியான தருமபுரி சிஎஸ்கே டிவி சார்பில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பாராட்டை தெரிவித்து விருது வழங்கப்பட்டது. மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் தலைமையில் மை தருமபுரி அமைப்பினர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக