விபத்தில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது, நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எவதுவுமில்லை, போக்குவரத்து பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது, விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தொப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொப்பூர் கணவாய் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வரும்போது மட்டுமே விபத்துக்கள் நடைபெறாது, எப்போது உயர் மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் எதர்பார்ப்பாக உள்ளது, தொப்பூர் கணவாயில் விபத்திற்கு முக்கிய காரணம் சாலை கட்டமைப்பு சரியில்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது, வளைவான, பள்ளமான சாலை பகுதியாக இருப்பதால், வாகனங்கள் கட்டுபடுத்த முடியாமல் அதி வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது,
சமீபத்தில தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தொப்பூா் கணவாய் பகுதியில் 775.41 கோடி ரூபாய் மதீப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்ட போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக