நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமுல்படுத்த கோரி தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு 21ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க கோரியும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமுல்படுத்த கோரி தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைய மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா மேற்கு கா. கருப்பண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர் தருமபுரி தொகுதி செயலாளர் கா.சக்தி வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா.தமிழ்ச்செல்வன் இரத்தின.நற்குமரன் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன் ஜெயந்தி எம்.எஸ்.ராமன் மாநில துணை செயலாளர்கள் அதியமான் காதர்பாஷா சிவஞானம் கிள்ளிவளவன் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மாராவாடிசெந்தில் தனம் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி ஆதிதமிழன் ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்திரன் எம்.எஸ்.மூவேந்தன் திருலோகன் கலையரசன் பழனி குமரன் பொன்.சுரேஷ் சந்தானமூர்த்தி தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி மாவட்ட அமைப்பாளர் தகடூர்கரிகாலன் அம்பேத்வளவன் மகளிரணி மாவட்ட துணை செயலாளர் பத்மாமாரியப்பன் தீப்பாஞ்சி மகாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக