பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா நடத்த பாதுகாப்பு கேட்டு குண்டாங்காடு ஊர்பொதுமக்கள் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜனவரி, 2024

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா நடத்த பாதுகாப்பு கேட்டு குண்டாங்காடு ஊர்பொதுமக்கள் மனு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குண்டாங்காடு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குண்டாங்காடு கிராமத்தில் தை மாத பொங்கல் பண்டிகை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து திருவிழா நடப்பது வழக்கம். இதில் சில நபர்கள் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் சில ஆண்டுகளாக வீண் தகராறு மற்றும் அடிதடியில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்றும் அப்படி மீறி நடைபெறும் நிலையில் எது வேண்டுமானலும் நடக்கும் என மிரட்டும் தோனியின் பேசி பயமுறுத்தி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட  கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் திரண்டு  பொங்கல் திருவிழா பாதுகாப்புடன் நடத்தவும் எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டாமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம்  மனு அளித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad