01.02.2024 முதல் 14.02.2024 முடிய கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

01.02.2024 முதல் 14.02.2024 முடிய கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. 

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டினக் கோழிகளுக்கும் மற்ற கோழிகளுக்கும் கோடைக் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. 


கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வாரத்திற்கு ஒரு முறை கால்நடை மருந்தகங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளை நிலையங்களிலும் மற்றும் கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் கோடைக்காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக இலவசமாக வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் 01.02.2024 முதல் 14.02.2024 முடிய கால்நடை பராமரிப்புத்துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் மாலை நேரங்களில் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.


கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுப்பதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு 1.20 இலட்சம் டோஸ்கள் RDVK தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களும் மற்றும் கோழிகள் வளர்ப்போர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad