பாலக்கோடு அரசு மருத்துவமணையில் 1 கோடி 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட ஒருங்கினைந்த பொதுசுகாதார ஆய்வக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பாலக்கோடு அரசு மருத்துவமணையில் 1 கோடி 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட ஒருங்கினைந்த பொதுசுகாதார ஆய்வக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 1 கோடி 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்ட, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதாைனத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இத்திட்ட்டத்தினை கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமணை வளாகத்தில்  நடைப்பெற்ற நிகழ்ச்சியில் , பொதுசுகாதார ஆய்வக கட்டிடக் கல்வெட்டினை தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிணர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, பொது பணித் துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம்,  தாசில்தார் ஆறுமுகம், மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad