பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 105 நாட்களுக்கு, வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறப்பு. விவசாயிகள் மகிழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 பிப்ரவரி, 2024

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 105 நாட்களுக்கு, வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறப்பு. விவசாயிகள் மகிழ்ச்சி.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை கடந்த 4 மாதத்திற்கு முன் நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அவர்கள் விவசாய பாசனத்திற்காக சின்னாறுஅணை வலது புறகால்வாய் வழியாக 105 நாட்களுக்கு, வினாடிக்கு 30 கன அடி வீதம், பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.


இதில்  ஆயக்கட்டு பாசன பகுதிகளான,  பஞ்சப்பள்ளி, பெரியானூர், அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட மொத்தம் 4500 ஏக்கர் விவசாய நிலம் இதனால் பாசனவசதி பெறுகின்றன. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.


இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை செயற்பொறியாளர் செந்தில், உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார்ஆறுமுகம், மாவட்டகவுன்சிலர் கவிதா சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் நாராணயனசாமி, பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மண்டலதுணை தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad